
இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு: விடைக்குறிப்புகளுடன் தேர்வு முடிவுகள் வெளியீடு 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு முடிவுகள் மற்றும் வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை 6.01/2024, 09.02.2024- 21.07.2024 அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 25,319 தேர்வர்கள் கலந்து கொண்டனர். மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: WMP No.16353 of 2024 and batch cases : 18.03.2025 ற்கிணங்க, மேற்காணும் போட்டித் தேர்வில், Part. B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட "A" வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trh.tn.gov.in- 28. 03. 2025 அன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28. 03. 2025 முதல் 03.04.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது...