Posts

Showing posts from April 11, 2025
Image
  குரூப் 4 தேர்வு! தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல! அன்புமணி ராமதாஸ் ஆவேசம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் போக்குவரத்துத் துறை குரூப் 4 பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.   போட்டித் தேர்வுகள் முடிவுகள் அக்டோபரில் வெளியாகின தமிழ்நாடு அரசின் பல்வேறு து...
Image
  கூட்டுறவுத் துறையில் 3,353 வேலைகள் ரெடி: அமைச்சர் அறிவிப்பு! கூட்டுறவுத் துறையில் 3,353 பணியிடங்கள் விரைவில்! அமைச்சர்  அறிவிப்பு! தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! கூட்டுறவுத் துறையில் விரைவில் 3,353 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.   சட்டசபையில்  நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் 13,266 பணியாளர்களைத் தேர்வு செய்ய தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் 9,913 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. தற்போது மீதமுள்ள 3,353 பணியிடங்களுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அவர் ...