Posts

Showing posts from April 2, 2025
Image
  புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 'பிட்' அடிக்க அனுமதி? கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை புதுச்சேரியில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த படத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவிகள் எழுதிய மாதிரித் தேர்வில் 95% மாணவர்கள் படுதோல்வி. தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திக் காட்டவும், தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதும் தவறான நிலையை ஆசிரியர்கள் அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்தும் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாவாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் இன்று கல்வ...
Image
  ரயில்வேயில் 9,970 உதவி ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்; ஏப்ரல் 10-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்! இந்தியன் ரயில்வே உதவி லோகோ பைலட் (உதவி ரயில் ஓட்டுநர்) 2025-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.  ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு 2025 (RRB ALP Recruitment 2025) இந்தியன் ரயில்வே இருக்கும் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  வயது வரம்பு  ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் எனவும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 முதல் 8 வருடங்கள்...