Posts

Showing posts from April 1, 2025
Image
 9 முதல் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்: சிபிஎஸ்இ அறிவிப்பு வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவ கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கர...
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்..!! டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்த முறை கூடுதலாக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பதவிக்கும் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 1-ல் 70 பணியிடங்களுக்கும் குரூப் 1 ஏ-ல் 2 பணியிடங்களை நிரப்பவும் தேர்வு நடைபெறுகிறது.