Posts

Showing posts from March 31, 2025
Image
  குரூப்-1 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு: முதல் முறையாக தொழிலாளர் உதவி ஆணையர் பதவி சேர்ப்பு டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப்படுகிறது. முதல் முறையாக குரூப்-1 பதவிகளுடன் தொழிலாளர் உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கிய இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால...