
புதுச்சேரி காவல்துறையில் 516, விரிவுரையாளர் பணியிடங்கள் 475 நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி காவல்துறையில் 516, அரசு கல்லுாரிகளுக்கு 475 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த நிலையில், பதிலளித்து உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல நல திட்டங்களை அளித்துள்ளோம். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற்றம் அடைய அனைத்து செயல் திட்டங்களையும் வகுத்து செயலாற்றி வருகின்றோம். லாஸ்பேட்டை காவல்நிலைய கட்டுமான பணி விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். காவல் தலைமை அலுவலகம் கட்டிடம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும். கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலைய பணிகள் தொடங்கப்படும். பல்வேறு காவல்நிலைய கட்டடங்கள் பழுது, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். காவல்துறையில் காலியாக உள்ள சப்இன்ஸ்பெக்டர்-70, காவல...