Posts

Showing posts from March 19, 2025
Image
  நீதிமன்ற வழக்குகளில் தீா்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசினாா். அப்போது, அதிமுக ஆட்சியில் 51 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியா்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும், இதில் 10-இல் ஒரு சதவீதம் கூட நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினாா். மேலும், ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்காக 2,800 பேரின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு 10 மாதங்களாக உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா். அமைச்சா் அன்பில் மகேஸ்: பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களில் 3,192 பேரை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம். அதில், ஆசிரியா் இல்லாத பணியாளா்கள் தங்களுக்கும் 2 சதவீத இடஒதுக்கீடு தேவை என வழக்குகளைத் தொடா்ந்தனா்...
Image
  அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் நாடு  முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் பதிலளித்தார். காலியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2025 ஜனவரி 31ம் தேதி கணக்குப்படி, 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவை. எஸ்சிக்கு 788, எஸ்டிக்கு 472, ஓபிசிக்கு 1,521 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் 7,825க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. கல்வி அமைச்சரின் கருத்து: "பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது." வேலை தேடுபவர்...
Image
  பட்ஜெட்டில் ஏமாற்றம்: பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க போராடும் 37,000 பட்டதாரி ஆசிரிய தேர்வர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023 அக்டோபர் 25-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டது. இத்தேர்விற்கு 40000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.  அதன்படி தேர்வு 04/02/2024 அன்று நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் 17/05/2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்காக அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 3192 ஆகும். ஆனால் 2803 பேரை மட்டுமே தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டது ஆணையம். அவர்களுக்கும் இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு நடைபெறவில்லை. கடைசியாக 2013-2014-ம் கல்வியாண்டில் அ.தி.மு.க ஆட்சியில் 20000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.  ஆனால் 10 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க ஆட்சியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 3192 மட்டு...