
குரூப்-1, குரூப்-4 தேர்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் சொன்ன முக்கிய தகவல்! குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் போது காலி பணியிடங்கள் குறித்த முழு விவரமும் குறிப்பிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியிருக்கிறார். மேலும் தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அல...