அரசு பணி தான் கனவா? ரெடியா இருங்க! நடப்பு ஆண்டிலேயே 40,000 பணியிடங்கள்.. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அரசு வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால், திமுக அரசின் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. கட்டுமானம், போக்குவரத்து, பஸ்கள், கல்வி, சுகாதாரம் என பல்வேறு துறைகள் மற்றும் புதிய திட்டங்கள் என பல்வேறு அறிவிப்புகளை தங்கம் தென்னரசு அறிவித்து வருகிறார். அந்த வகையில், படித்துவிட்டு அரசு வேலைக்கா...