Posts

Showing posts from March 11, 2025
Image
  TN HSC Maths Exam Analysis: பிளஸ் 2 கணித தேர்வு சற்று கடினம்; மாணவர்கள் கருத்து தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 11) நடைபெற்ற கணிதப் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர். இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த கணிதத் தேர்வு கடினமான அளவில் இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். கணித தேர்வு ஒட்டுமொத்தமாக சிரமமான அளவில் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தது, சில கேள்விகள் பாடத்திற்குள் இருந்து தந்திரமாக கேட்கப்பட்டிருந்தன. ஆனால் 5 மதிப்பெண்கள் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன, பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. 3 மதிப்பெண் வினாக்களும் சற்று கடினமாக இருந்தன. 2 மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய வினாக்கள் கடினமாக இருந்தன...
Image
 "சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படித்துவிட்டு அரசு வேலை ஏன் கேட்கிறீர்கள்" - நீதிபதிகள் காட்டம்! தேனி  மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் தேனியில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தார். இவர் தனது பள்ளிக்கல்வியைத் தமிழ்வழியில் படிக்காததால் தமிழக அரசின் அரசு பணியாளருக்கான விதிப்படி தமிழ் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் இவர் தமிழ்த் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதன் காரணமாக இவரைப் பணி நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இதனையடுத்து இவர் மின்வாரியத்துறையின் பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கின் மனுதாரர் தமிழர் என்பதால் அவருக்குப் பணி வழங்கலாம்" என உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை எத...
Image
  CBSE Class 10 Maths Exam analysis: தந்திரமான, கடினமான வினாத்தாள்; சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு கணித தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு இன்று (மார்ச் 10) நடைபெற்றது. கணித வினாத் தாள் தந்திரமானதாகவும் நீளமாகவும் இருந்தது, நேரடியான கேள்விகள் எதுவும் இல்லை என ஆசிரியர்களும் மாணவர்களும் கூறுகின்றனர். என்.சி.இ.ஆர்.டி (NCERT) உடன் இணைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் முழுமையான தயாரிப்பு மற்றும் கருத்தியல் தெளிவு கொண்ட மாணவர்களால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை எளிதாகத் தீர்க்க முடியும் என்று ஆசிரியர்கள் கூறினர். துலேராவின் வித்யாக்யான் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆஷிஷ், தனக்கு முதல் செட் கிடைத்ததாகக் கூறினார். 'செட் 1 மிகவும் சவாலானது, குறிப்பாக பல தேர்வு கேள்விகள். 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் கேள்விகளில் பெரும்பாலானவை தந்திரமானவை, குறிப்பாக முக்கோணவியல் தொடர்பானவை,' என்று ஆஷிஷ் கூறினார். அதே சி.பி.எஸ்.இ பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் விஷால், செட் 2 மற்ற செட்களை விட ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது என்று கூறினா...