
ஜூன் மாதத்திற்குள் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்; 6 மாதத்தில் மீண்டும் செட் தேர்வு; முக்கிய அப்டேட் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதம் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், 6 மாதத்தில் மீண்டும் செட் தேர்வு நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதறகான அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் செட் தேர்வு சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது நடைபெறுகிறது. முதலில் 2024 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்தவிருந்தது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியமே செட் தேர்வை நடத்தும் என அறிவிக்கப்...