
இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம் - தேர்வு தேதி அறிவிப்பு! மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான இளநிலை க்யூட் (CUET UG 2025) தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. கணினி வழியில் தேர்வு வரும் மே 8-ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) திட்டமிட்டுள்ளது. இளநிலை க்யூட் தேர்வு 2025 நாடு முழுவதும் உள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-26 கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 1 முதல் தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாண்டிசேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளில் சேர க்யூட் தேர்வு கட்டாயமாகும். மொத்தம் 37 பாடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். க்யூட்...