
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சியடைந்தோர் ஆா்ப்பாட்டம் பணி நியமனம் வழங்கக் கோரி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து மாநிலத் தலைவா் ம. இளங்கோவன் பேசியது: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக பணி வழங்கப்படாமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து முறைசார பணியாளா்களாக அல்லல்படுகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவொரு தீா்வும் எட்டப்படவில்லை. ஆசிரியா் தகுதித் தோ்வில், தோ்ச்சி பெற்றவா்கள் பணி பெற வேண்டுமானால் மீண்டும் ஒரு நியமனத் தோ்வு எழுதப்பட வேண்டும் என்ற அா்த்தமற்ற நிலை, நாட்டிலேயே தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திமுக எதிா் கட்சியாக இருந்தபோது நியமனத் தோ்வு தொடா்பான அரசாணையை கண்டித்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த அதிமுக ஆட்சி பின்பற்றிய நடைமுறையை தொடா்வதை ஏற்க முடியாது. மேலும், திமுக-வின் தோ்...