Posts

Showing posts from February 26, 2025
Image
 இனி பி.இ., பி.எட்., முடித்தாலே பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்! புதிய அரசாணை வெளியீடு பி..இ. பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி உள்ளவர்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி. டெக் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலை வாய்ப்பு வகையில் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு சமமானது என தெரிவித்துள்ளார். இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இயற்பியல் அறிவியலில் பி.எட்., முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம் என்றும் அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Image
 தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர் இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.25-ம் தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஸ் ஆகி...
Image
  வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்... ஜாக்டோ ஜியோ கொந்தளிப்பு! தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 25ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஊதிய முரண்களை களைய வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் சென்னை எழிலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன், "இன்று தமிழக அரசை வன்மையாக கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டா ஜியோ ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம். எங்களது உழைப்பு , தியாகத்தால் தமிழக மக்களை மேம்பட வைக்கிறோம்.  திங்கள் அன்று அரசு தரப்பில் அமைச்சர்கள் எங்களுடன் 2:30 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் எங்கள் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தோம் அதன்பின் அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகள் குறித்து திங்கள் மாலை முதல்வருடன் பேசி முடிவை அறிவிப்பதாக கூறினர். 8 மணிக்கு ...