
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல் PM SHRI Scheme: தமிழ்நாட்டில் PM SHRI கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள மொழி ஆசிரியர்களின் விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய - மாநில அரசுகள் மோதல்: புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் PM SHRI திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசு மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேரிடும் எனவும், திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், உலகின் மூத்த மொழியான தமிழை பிரதமர் மோடி போற்றுவதோடு, உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதாகவும் கூறி வருகிறார். ஆன...