Posts

Showing posts from February 21, 2025
Image
  குரூப் 2ஏ முதன்மை தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 2ஏ பணிகள் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைதேர்வு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அதாவது வருகிற 26ம் தேதி மாலை 5.45க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ''...
Image
 '56 மொழிகளை விழுங்கியுள்ளது இந்தி; நாம் பலியாகக் கூடாது'- எச்சரிக்கை மணியடித்த அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது.  உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இந்தியாவில் முழுமையாக 56 மொழிகள் முழுமையாக விழுங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இந்தி மொழியால் விழுங்கப்பட்டிருக்கிறது.  இதே அமைச்சர் தர்மேந்திர பிரதான் சார்ந்திருக்கின்ற மாநிலமான ஒடிசாவில் இருக்கக்கூடிய ஒரியா மொழி உட்பட போ...
Image
  Teachers: ''அரசு வேலைன்னு நம்பினோம்; கூலி வேலைக்குப் போறோம்''- கண்ணீர் விடும் ஆசிரியர்கள்! ஆசிரியர் பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதங்களுக்கு மேலாகியும் பணி வழங்கப்படவில்லை என தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3,192 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கக் கோரி புத்தகங்களை ஏந்தி, குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் புகைப்பட முகமூடி அணிந்து குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடந்தது என்ன? 2012, 2013, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற டெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்காக BT/ BRTE போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வை, எழுதிய நிலையில் மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2800 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏமாற்றம்தான் மிச்சம் இன்று எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கலைச்செல்வி கூறும்போது, '...
Image
  பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான 3192 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்குக: அன்புமணி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.  அரசு பள்ளி ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் நிறைவேற்றி விட்ட நிலையில், அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் ந...
Image
  சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசால் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும்.