Posts

Showing posts from February 20, 2025
Image
  காலி பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி நியமன தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் கூடிய சிவப்பு நிறத்திலான `டி ஷர்ட்' அணிந்திருந்தனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை. எங்களின் கனவுகளை நிறைவேற்ற காலிப் பணியிடங்களை அதிகரித்தால்தான் முடியும். இது தொடர்பாக முதல்வர், து...
Image
  அமைச்சரை மாற்றுங்கள்.. அன்பில் மகேஷ் அமைச்சராக தொடர தகுதி இல்லை..!! - அண்ணாமலை காட்டம் பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.  பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிற...
Image
  மத்திய அரசு நிதி கொடுக்கவில்லைனா என்ன.. பட்ஜெட்டில் வெளியாகப் போகும் அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ்! தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவை தொகை அளிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், இந்தி திணிப்பு கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிதி விடுவிக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு...