Posts

Showing posts from February 16, 2025
Image
  அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கு ஏப். 5, 6-ம் தேதிகளில் போட்டி தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பாடப்பிரிவுகளில் 232 உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 24-ல் வெளியிட்டு, அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்,, உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும்.  தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக ...
Image
  அகங்காரத்தில் பேசுகிறார் தர்மேந்திர பிரதான்.. NEP கூலி தொழிலாளிகளை உருவாக்கும்.. கஜேந்திரபாபு பேட்டி மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனிடையே ஒருங்கிணைந்த கல்விக்கான மத்திய அரசு நிதியை தமிழ்நாட்டிற்கு அளிக்காமல், அதனை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு திருப்பிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரம் தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாரணாசியில் தொடங்கியுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்கு தெரியும். தமிழக அரசு அரசியல் காரணத்திற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் தமிழை படிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழக அரசு மட்டுமே இருமொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது. தேசிய கல்விக் கொள்கையை ...
Image
 "பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி! தேசிய கல்வியை கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பதிலடி அளித்துள்ளார். அண்ணாவின் வாசகத்தை மேற்கோள் காட்டி, உரிமையை கேட்கிறோம் பிச்சை கேட்கவில்லை என பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கொடுத்த பதிலடி: எக்ஸ் தளத்தில் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், "வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல. "பிச்சை இல்லை.. உரிமையை கேட்கிறோம்" இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம...
Image
  தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?" என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் உள்ளது.  தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திருப்பிவிட்டது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் பிடிவாதமாக தெரிவித்துள்ளார்.