பணி நிரந்தரமே பிரச்சினைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 14 கல்வி ஆண்டுகளாக பணியாற்றி வரும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். கடந்த 2016 மற்றும் 2021 ஆண்டு தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் 'பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்கள் திமுக தேர்தல் அறிக்கையில் 181 வது வாக்குறுதி, நிறைவேற்றப்படுமா என எதிர்பார்த்து காத்திருகின்றனர். தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன்படி, 3 ஆயிரத்து 700 உடற்கல்வி ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 700 ஓவிய ஆசிரியர்கள், 2 ஆயிரம் கணினிஅறிவியல், ஆயிரத்து 700 தையல் ஆசிரியர்கள...