
பேராசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு மார்ச் 6, 7, 8, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு பேராசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு மார்ச் 6, 7, 8, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அமைச்சர் கோ.வி.செழியன் அறிவித்துள்ளார். தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னால், அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களைப் பெறலாம். மாநிலம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவிலான தகுதித் தேர்வை மாநில பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன. 2 ஆண்டுகளாக நடைபெறாத தேர்வு ஆண்டுதோறும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வு தள்ளி வைக்கப்பட்ட...