
பணி நிரந்தர கோரிக்கை - டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணி, கைது! பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.அவர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக எழும்பூர் எல்.ஜி.சாலையில் இன்று காலை ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து, அவர்கள் பேரணி செல்ல முயன்ற நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: ''டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேசியபோது, கோரிக்கையை நிராகரிக்காமல் பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். அதிகாரிகளுடம் பேசும்போது, அரசு தான் முடிவெடுக்கும் என்றனர். ஆனால் பேச்சுவார்த்...