
மீண்டும் வருகிறது ஒராண்டு பி.எட் படிப்பு; யார் எல்லாம் தகுதி? மத்திய அரசாங்கம் ரத்து செய்த பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஒரு வருட பி.எட் படிப்பை மீண்டும் கொண்டுவர உள்ளது; யார் எல்லாம் இந்த படிப்பில் சேர தகுதியுள்ளவர்கள் என்பது இங்கே ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர உள்ளது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றிய நிலையில் தற்போது ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் ஒரு பகுதியான இந்த மாற்றம், 2026-27 முதல் நடைமுறைக்கு வரும், இது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் பணிக்கான விரைவான வழிகளை மீண்டும் வழங்குகிறது. வரைவு விதிமுறைகள் 2025 ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் சமீபத்திய பொதுக்குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் கருத்துகளைப் பெற விரைவில் பகிரங்கப்படுத்தப்படும். பல தசாப்தங்களாக ஓராண்டு படிப்புகளாக நடத்தப்பட்ட பி.எட் மற்று...