
TANGEDCO: மின் வாரியத்தில் நிரப்பப்படாமல் 39 ஆயிரம் காலி பணியிடங்கள் - அதிர்ச்சி தகவல்! தமிழ்நாடு அரசின் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான tangedco-வில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு துறை சார்ந்த காலி பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுகள் மூலமும், நேர்காணல்கள் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வப்போது காலி பணியிடங்கள் மற்றும் அதற்காக நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும். இப்படியான நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) சுமார் 25,551 கள உதவியாளர்கள், 13,216 வயர்மேன்கள் மற்றும் 626 கேங்மேன்கள் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த தகவல் வெளியான நிலையில் இது ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களை எரிச்சலடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணியிடங்களை நிரப்பாமல் வேலைகள் பகிர்ந்தளிக்கப்படுவதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக ஊழியர்கள் குமுறுக...