Posts

Showing posts from February 6, 2025
Image
  TRB மூலம் மேலும் ஒரு போட்டித் தேர்வு அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நேரடி நியமனம் முதல்முறையாக டிஆர்பி போட்டித் தேர்வு மூலம் நடைபெற உள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இதுவரை அப்பல்கலைக்கழகம் வாயிலாகவே நியமிக்கப்பட்டு வந்தனர்.  இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர்கள், நூலகர்கள் முதல்முறையாக டிஆர்பி போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளனர். உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களையும் ஆன்லைனில் பெற்றது. ஆனால், பணி நியமனம் தொடர்பாக அடுத்த கட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் நேரடி நியமன போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் அறிவித்துள்ளா...
Image
  10,12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு 14ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை 14ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணைய தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  பிளஸ் 1 வகுப்பில் அரியர் வைத்துள்ளவர்கள், பிளஸ் 2 தேர்வுகள் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வு ஹால்டிக்கெட்டுதான் வழங்கப்படும். தேர்வுக்கான அட்டவணை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Image
  குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மீண்டும் மாற்றமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. மீண்டும் பாடத்திட்டம் (syllabus) மாற்றப்படும் என்ற தகவலில் உண்மையில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை ஆண்டு தோறும் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வருடக்கணக்கில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். குரூப் 4 பாடத்திட்டம் எப்படியாவது ஒரு அரசு வேலைக்கு போய் விட வேண்டும் என்ற கனவுடன் பட்டம் முடித்த பலரும் பயிற்சி மையங்களுக்கு சென்றும், வீட்டில் இருந்தபடியும் விடா முயற்சியுடன் படித்து கனவை நிறைவேற்றி வருகிறார்கள். தேர்வர்கள் தேர்வுக்கு தயா...