Posts

Showing posts from January 29, 2025
Image
  டெட் தேர்வை பற்றி அறிவிக்காத தமிழக அரசு!! ஆசிரியர்கள் குமுறல்!! நம் தமிழக அரசின் உத்தரவின்படி, வருடத்திற்கு இருமுறை டெட் தேர்வு வைக்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு குழு அறிவித்திருந்தது. ஆனால், வருடம் முடியும் வரை டெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகவே இல்லை. கடைசியாக தமிழகத்தில் 2023 அக்டோபரில் இந்த தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இதனால், இந்த வருட டெக் தேர்வு குறித்து பி.எட் படிப்பை முடித்த ஆசிரியர்கள் வெகு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். போன வருடம் முழுவதும் ஏன் டெட் தேர்வு நடத்தவில்லை என்பது குறித்து தேர்வு ஆணையம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த வருடமாவது, தேர்வு குறித்து முன்கூட்டியே அறிவிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும், இந்த தேர்வை ஒரு முறையில் கிளியர் செய்வது கடினம். எனவே சென்ற வருடம் பி.எட் படித்த ஆசிரியர்கள் ஒத்திகைக்கு இது பெரும் பயன்படும் என்று ஆசிரிய பெருமக்கள் தெரிவித்து வருகின்றனர்.  இந்த தேர்வை கிளியர் செய்தால் தான் அரசு பள்ளிகளில் அல்லது அரசு சார்ந்த உதவி பள்ளிகளில்...
Image
  தமிழகத்தில் 6.50 லட்சம் காலி பணியிடங்கள்.! என்ன செய்யப்போகிறது அரசு- காத்திருக்கும் இளைஞர்கள் தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு ஊழியர்களாக உள்ளனர். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் மக்களும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள். அந்த காலி பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பாமல் பல இடங்களில் காலியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு உதவிதிட்டங்களை உடனடியாக சென்று சேர்க்க முடியாத நிலை உள்ளது.   திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.? இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்...
Image
  பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - டிடிவி தினகரன் ஆவேசம்! ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2023 ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், அதன் பின் தற்போது வரை தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய ஆசிரியர...