பள்ளிக் கல்வித் துறையில் 47000 பேருக்கு ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி.. 'நிரந்தரமாகும்' அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகப் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நிரந்தரப் பணியிடங்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் -10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை உள்ள ஆசிரியர் ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post), 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும்...