
NEET UG 2025 : நீட் தேர்வு முறையில் மாற்றம்.! அனைத்து கேள்விகளும் கட்டாயம்; தேர்வு நேரம் குறைப்பு - முழு விவரம்! இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஒவ்வொரு ஆண்டு சுமார் 24 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் முறையில் இருந்த தளர்வை நீக்கி, பழைய முறையில் இந்தாண்டு தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA)அறிவித்துள்ளது. இதனால் நீட் தேர்வு வினாத்தாளில் அனைத்து கேள்விகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடக்க உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் தேசிய தேர்வு முகமை (NTA) மாற்றியுள்ளது. அதாவது, கொரோனா காலத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் முறையில் இருந்த தளர்வை நீக்கி, பழைய முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறையில் மாற்றம் இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா காலத்தில்...