
NEET 2025 New Pattern: நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு மருத்துவ இளநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக, தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும் ரத்து செய்யப்பட உள்ளது. இதுகுறித்து என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ''அனைத்து இளங்கலை நீட் தேர்வர்களுக்கும் (NEET (UG)- 2025) முக்கிய அறிவிப்பு வெளியாகிற்து. அதன்படி, கேள்வித் தாள் முறையும் தேர்வு நேரமும் கோவிட் காலத்துக்கு முந்தைய முறைக்கு மாற்றப்படுகிறது. இதன்படி, செக்ஷன் பி என்னும் தெரிவு இனி நடைமுறையில் இருக்காது. 180 கேள்விகளும் கட்டாயம் இதன்மூலம் மொத்தம் 180 கேள்விக்குக் கட்டாயம் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியல் பாடத்தில் 90 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். மொத்தம் 180 கேள்விகளுக்கும் விடை தர ...