
UPSC CSE 2025; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விருப்பமா? 979 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க! இந்தியாவின் மிக உயர்ந்த பணியிடங்களுக்கான தேர்வான இந்திய குடிமை பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமை பணி சேவைகளின் தேர்வுக்கான அறிவிப்பு இது. மொத்தம் 979 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்திய குடிமை பணிகள் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு மூலம் கீழ்கண்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 979 கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 100., எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை...