Posts

Showing posts from January 20, 2025
Image
  TNPSC - தேர்வாணையம் OMR விடைத்தாளில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது . புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - " OMR Answer Sheet - Sample " என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .  வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் ( ballpoint pen ) நிரப்புவது தொடர்பாகவும் , மேலும் , பக்கம் -1 ல் பகுதி -1 ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம் -2 ல் பகுதி- 1 ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே , தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Image
  டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தேதி அறிவிப்பு! தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் 'டான்செட்' மற்றும் 'சீட்டா' நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜன.24 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான 'டான்செட்' தோ்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மாா்ச் 22 அன்று தோ்வுகள் நடைபெற உள்ளது. அதேபோல, முதுநிலை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் நடத்தப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு சீட்டா (CEETA) வருகிற மார்ச் 23 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 24 முதல் தொடங்கவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும...
Image
  இந்த ஆண்டாவது ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுமா? - பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக் கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்று பிஎட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.  அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சிடெட்) தேர்ச்சி கட்டாயம் ஆகும். சிடெட் தேர்வை மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.  மாநில அளவிலான டெட் தேர்வை அந்தந்த மாநிலத்தில் ஏதேனும் ஒரு தேர்வு அமைப்பு நடத்தும். அதன் படி, தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்துகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என...