Posts

Showing posts from January 10, 2025
Image
 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பேசினார்.  அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவையில் பேசிய பல உறுப்பினர்கள் பத்தாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் மூலம் கடந்த நவம்பர் மாதம் 3,198 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆனை வழங்க தயாராக இருந்த நிலையில், ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்த காரணத்தால் ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கில் நல்...