Posts

Showing posts from January 5, 2025
Image
 சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன..!! கடந்த டிசம்பரில் நடந்த சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சேர சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்வது கட்டாயமாகும். நாடு முழுவதும் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் மற்றும் விடைத்தாள்களின் (OMR தாள்கள்) நகல்கள் CBSE இணையதளத்தில் (https://ctet.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.  பரிந்துரைக்கப்பட்ட பதில்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஜனவரி 5-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். சிபிஎஸ்இ கட்டணம் ரூ. 1000-த்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
Image
  டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?- அன்புமணி 2025-ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?விவரங்களை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறித்த விவரங்களை இரு அமைப்புகளும் இன்னும் வெளியிடவில்லை.  அரசு பணிகள் குறித்த அறிவிப்புகளுக்காக ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் காத்துக்கிடக்கும் நிலையில் அரசு பணிகள் குறித்த விவரங்களை திட்டமிட்டே வெளியிடாமல் அரசு தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை ஓர் ஆண்டில் எத்தனைப் போட...