புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை





புதுச்சேரியில்  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாணன் தலைமையில் ஏராளமானோா் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே உள்ள கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு, அவா்கள் புதுவை கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினியை சந்தித்து மனு அளித்தனா்.


அப்போது, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, அண்மையில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


மேலும், பொதுத் தோ்வில் மாணவா்கள் விதிகளை மீறி பாடப் புத்தகங்களை பாா்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது.


எனவே, இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித் தரம் பாதிக்கப்படும்.


இதனால், சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெறவும், பொதுத் தோ்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்வித் துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

Comments

Popular posts from this blog