தமிழக போலீசில் 1299 எஸ்.ஐ பணி: தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி?
தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
காக்கிச்சட்டை போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைய அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காவல் சார்பு ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1299
காலியிடங்களின் விவரம்
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 933
காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 366
வயதுத் தகுதி: அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு
எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு (45) மற்றும் உளவியல் (25) சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.
உடற்தகுதி தேர்வு
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
நேர்முகத்தேர்வு
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.
பாடத்திட்டம்
தமிழ் மொழித் தகுதித் தேர்வு
10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் என்ற தலைப்புகளின் கீழ் வினாக்கள் கேட்கப்படும்.
முதன்மைத் தேர்வு
10 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், சூழ்நிலையியல், உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் மற்றும் உளவியல் தலைப்புகளின் கீழ் வினாக்கள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் முதலில் மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண்ணை சரிபார்க்க வேண்டும். பின்னர் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, கடவுச் சொல்லை உருவாக்கி பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பதிவெண், கடவுச்சொல் கொண்டு உள்நுழைந்து, உங்கள் கல்வி, முகவரி, சாதி உள்ளிட்ட பிற விவரங்களை உள்ளிட வேண்டும்.
அடுத்ததாக புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற ஆவணங்களை பதிவேற்றி சமர்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை எதிர்கால தேவைக்காக பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnusrb.tn.gov.in/sijoint-tnusrb.php என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
Comments
Post a Comment