TN HSC Maths Exam Analysis: பிளஸ் 2 கணித தேர்வு சற்று கடினம்; மாணவர்கள் கருத்து



தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 11) நடைபெற்ற கணிதப் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.


இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த கணிதத் தேர்வு கடினமான அளவில் இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.


கணித தேர்வு ஒட்டுமொத்தமாக சிரமமான அளவில் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தது, சில கேள்விகள் பாடத்திற்குள் இருந்து தந்திரமாக கேட்கப்பட்டிருந்தன. ஆனால் 5 மதிப்பெண்கள் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன, பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. 3 மதிப்பெண் வினாக்களும் சற்று கடினமாக இருந்தன. 2 மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய வினாக்கள் கடினமாக இருந்தன. சில எதிர்பாரா கேள்விகள் இருந்தன என்று மாணவர்கள் கூறினர்.


தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படித்த அனைவரும் தேர்ச்சி பெறும் அளவில் வினாத்தாள் இருந்தது. அதிக மதிப்பெண் எடுப்பது சற்று கடினமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog