இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம் - தேர்வு தேதி அறிவிப்பு!




மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான இளநிலை க்யூட் (CUET UG 2025) தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. கணினி வழியில் தேர்வு வரும் மே 8-ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) திட்டமிட்டுள்ளது. 


இளநிலை க்யூட் தேர்வு 2025

நாடு முழுவதும் உள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-26 கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, மார்ச் 1 முதல் தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாண்டிசேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளில் சேர க்யூட் தேர்வு கட்டாயமாகும்.

மொத்தம் 37 பாடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

க்யூட் தேர்வை 13 மொழிகளில் எழுதலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தேர்வை எழுதலாம்.


க்யூட் தேர்வு தகுதிகள் 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் க்யூட் தேர்வை எழுத தகுதியானவர்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களில் அதிகபடியாக 5 பாடங்கள் வரை தேர்வு செய்யலாம். 


விண்ணப்பிப்பது எப்படி?


படி 1 : https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.


படி 2 : முகப்பு பக்கத்தில் Registration for CUET(UG)-2025 is LIVE என்று இடம்பெற்று இருக்கும். 


படி 3 : அதனைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து ஒரு பக்கம் திறக்கும். 


படி 4 : அதில் New Registration என்பதை கிளிக் செய்யவும். 


படி 5 : தொடர்ந்து, தேர்விற்கு பதிவு செய்து பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும். 


படி 6 : இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


விண்ணப்பக் கட்டணம் 

3 பாடங்கள் வரை தேர்வு செய்ய பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.900, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.4,500 செலுத்த வேண்டும்.


கூடுதலாக தேர்வு செய்யும் ஒவ்வொரு பாடங்களுக்கும் பொதுப் பிரிவினருக்கு ரூ.400, ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.375, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.350 மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும்.


முக்கிய நாட்கள் 


விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2025


விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 23.03.2025


விண்ணப்பம் திருத்த கால அவகாசம் 24.03.2025 முதல் 26.03.2025

அட்மிட் கார்டு தேர்விற்கு முன்பு வெளியிடப்படும்.


தேர்வு தேதிகள் மே 8 முதல் ஜூன் 1 வரை (உத்தேசமாக)


தேர்வு நடைமுறை 


General Aptitude Test மற்றும் மொழி பாடங்கள் சேர்த்து மொத்தம் 5 பாடங்கள் வரை தேர்வு செய்ய முடியும். 12-ம் வகுப்பில் எந்த பாடத்தில் பொதுத்தேர்வை எழுதி இருந்தாலும், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்யலாம்.


மொத்தம் 50 கேள்விகள் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் நெகட்டிவ் மதிப்பெண் ஆக கழிக்கப்படும். அனைத்து கேள்விகளும் கட்டாயம்.

கணினி வழியில் 60 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.


க்யூட் தேர்வு 2025 விண்ணப்பத்தில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 011- 40759000 / 011-69227700 ஆகிய எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in என்ற இமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம். க்யூட் தேர்வின் பாடத்திட்டம், பல்கலைக்கழகங்கலின் பட்டியல் ஆகியவற்றை மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog