சத்துணவு பணியாளர்கள் பணி நியமனம் எப்போது.? அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் அறிவிப்பு
தமிழகத்தில் 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
Anganwadi workers : பள்ளியில் மாணவர்களுக்கு சத்தான உணவுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பள்ளிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கையானது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள்மொத்தம் 7,783 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதன் படி அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் என மூன்று பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இவர்களுக்கு மாத சம்பளமாக 24,400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எப்போது பணியாளர் தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இதற்கான அறிவிப்பு தமிழக சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின், போது, மலையம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடுமா என்றும், காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கபடுமா என்று சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார்.
இதில் பதில் அமைச்சர் கீதா ஜீவன்,மலையம்பட்டு கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று தெரிவித்தார். மேலும், அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை கடந்த வாரம் பிறபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இதே போல 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.
இதனைத் தொடர்ந்து பாமக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதனிடையே சாயப்பட்டறை பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், பவானிசாகர் ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்க சாயப்பட்டறைக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
பவானி ஆற்றங்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த ஆலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என ஏற்கனவே புகார் வந்திருப்பதாகவும் கூறினார். ஆலைகளில் வெளியேறும் கழிவுநீரை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி நடைபெறும் எனவும், விதிகளை மீறினால் அந்த ஆலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
Comments
Post a Comment