"மேலும் 1000 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள்"- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழகத்தில் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து விதமான அரசுப்பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு சட்டக்கல்லூரி என தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகள் ஆகியோரை பொதுத்தேர்வு முறையில் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கான நாட்காட்டியை அவ்வப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவேற்றம் செய்யும்.
ஏற்கனவே, தமிழகத்தில் 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment