TANGEDCO: மின் வாரியத்தில் நிரப்பப்படாமல் 39 ஆயிரம் காலி பணியிடங்கள் - அதிர்ச்சி தகவல்!



தமிழ்நாடு அரசின் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான tangedco-வில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு துறை சார்ந்த காலி பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுகள் மூலமும், நேர்காணல்கள் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வப்போது காலி பணியிடங்கள் மற்றும் அதற்காக நடத்தப்படும்.


 டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும். இப்படியான நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) சுமார் 25,551 கள உதவியாளர்கள், 13,216 வயர்மேன்கள் மற்றும் 626 கேங்மேன்கள் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.


 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த தகவல் வெளியான நிலையில் இது ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களை எரிச்சலடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


பணியிடங்களை நிரப்பாமல் வேலைகள் பகிர்ந்தளிக்கப்படுவதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக ஊழியர்கள் குமுறுகின்றனர். இந்த காலியிடங்கள் தமிழ்நாட்டில் 12 விநியோக வட்டங்களில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.


 இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், "பொதுவாக மின்சார துறை என்பது மருத்துவமனை, காவல் போன 24 மணி நேரமும் இயங்க வேண்டிய மிக முக்கியமான துறையாகும். சுனாமியில் தப்பியவர்..


சமூகம் உயர கல்வி கற்க உழைப்பவர்.. யார் இந்த வாசுகி வினோதினி? கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மின்சாத பொருட்களை கவனமுடன் கையாண்டு நாம் வீடுகளில் நிம்மதியாக மின்சார வசதியுடன் திகழ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 


அதேசமயம் மக்கள் தொகை அடர்த்தியால் மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் திறமையான கள ஊழியர்களின் பற்றாக்குறை உள்ளது.


இந்த வேலையின் பணியிடங்கள் இருப்பது பற்றி உயர் அதிகாரிகள் பெரிதாக கவலைப்படுவதில்லை என சொல்கிறார்கள்.ஏதேனும் பிரச்னை அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே கவலைப்படுகிறார்கள். 


அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதே கிடையாது. இதன் காரணமாக ஒவ்வொரு மண்டலம் மற்றும் விநியோக வட்டங்களிலும் உள்ள உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கிராம மக்களின் உதவியைப் பயன்படுத்துகின்றனர். இது சட்டவிரோதமான ஒன்றாலும்.


இந்த மின் வல்லுநர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.100-ரூ.150 வரை பணிக்காக வசூலிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளனர். திருடர்களை விரட்ட இப்படி ஒரு ஐடியாவா? யோசனைக்கு குவியும் பாராட்டு இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் கேட்டபோது, "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கள பணியாளர்களை நியமிக்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் விரக்தியடைந்துள்ளோம்.


பல பிரிவுகளில் வயர்மேன்கள் இல்லாததால் தற்போதுள்ள தொழிலாளர்கள் அதிக சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். புதிய மின் இணைப்புகளை செயல்படுத்துதல், மின் மீட்டர்கள் மற்றும் பிற மின் சாதனைங்களை நிறுவுதல் மற்றும் சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு அவர்கள் பொறுப்பாகும். 


ஆனால் வயர்மேன்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த வேலைகள் கேங்மேன்களால் செய்யப்படுகின்றன, இது சிக்கல்களை ஏற்படுத்துகிறது" என தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog