NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வானது, வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எது என்றும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.
இளநிலை நீட் தேர்வு :
இளநிலை மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான ஒரே தேர்வான NEET UG, மே 4 அன்று பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தப்படும். NEET UG 2025 க்கான, முடிவுகள் ஜூன் 14, 2025 க்குள் அறிவிக்கப்படும் என்று NTA அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், NEET UG 2025 விண்ணப்பத்தை விண்ணப்பிக்க மார்ச் 7 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பப் படிவத்தைத் திருத்துவதற்கு காலமானது மார்ச் 9 மற்றும் 11 க்கு இடையில் திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
தேர்வு தேதி: மே 4 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 7
விண்ணப்பத்தில் திருத்தம்: மார்ச் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கும் முறை: www.nta.ac.in , exams.nta.ac.in , neet.nta,nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதர விவரங்கள்:
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளதால், இப்போது முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டியவை:
விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது, மாணவர் சேர்க்கையின்போது 17 நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
நீட் இளங்கலைத் தேர்வை எழுத, விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment