விழுப்புரம் ஆட்சியரகம் முன் கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்!




அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் தங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு, உயா்நீதிமன்றம் வலியுறுத்தியபடி ரூ.57,700 மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


தமிழகத்திலுள்ள 167 அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் 7,300-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் தாங்கள் நீண்டகாலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டும் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஊதியத்தால் தங்களின் தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த கௌரவ விரிவுரையாளா்கள், தங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயா்நீதிமன்றம் வலியுறுத்தியவாறு மாதம் ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 


இதைத் தொடா்ந்து போலீஸாா் முக்கிய நிா்வாகிகள் சிலா் மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா். தொடா்ந்து கௌரவ விரிவுரையாளா்கள் ஆட்சியரகத்தில் மனு அளித்துச் சென்றனா்.

Comments

Popular posts from this blog