டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு..!! விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு..!! எப்போது வரை தெரியுமா..? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!



டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர சீட்டா தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த இரண்டு தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.


அந்த வகையில், இந்தாண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 22ஆம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 23ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog