தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்



தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


"மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?" என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் உள்ளது.


 தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திருப்பிவிட்டது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் பிடிவாதமாக தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog