UPSC CSE 2025; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விருப்பமா? 979 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!
இந்தியாவின் மிக உயர்ந்த பணியிடங்களுக்கான தேர்வான இந்திய குடிமை பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமை பணி சேவைகளின் தேர்வுக்கான அறிவிப்பு இது. மொத்தம் 979 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்திய குடிமை பணிகள் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு மூலம் கீழ்கண்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 979
கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 100., எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்கள் உடைய கொள்குறி வகை விடையளித்தல் தேர்வாக நடைபெறும். முதல் தாள் 100 பொது வினாக்கள் அடங்கிய தேர்வாக 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இரண்டாம் தாள் 80 திறனறி வினாக்கள் அடங்கிய தேர்வாக 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தவறான விடைகளுக்கு எதிர்க்குறி மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த தேர்வில் இரண்டாம் தாளில் 33% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, முதல் தாள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். முதல் தாளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே.
முதன்மைத் தேர்வு: இந்த தேர்வு 9 தாள் அடங்கிய எழுத்து தேர்வாக நடைபெறும். அதாவது விரிவான விடையளித்தல் தேர்வு. இவற்றில் 2 தாள்கள் தகுதித் தேர்வு மட்டுமே. முதன்மைத் தேர்வு மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வு: நேர்முகத் தேர்வு மொத்தம் 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://upsconline.gov.in/upsc/OTRP/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2025
Comments
Post a Comment