TANGEDCO வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10,200 புதிய பணியிடங்கள்!




தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) 10,200 காலிப்பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


2024 மார்ச் நிலவரப்படி, மின்சார வாரியத்தில் 82,384 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், 59,824 காலியிடங்கள் இருப்பது ஊழியர்களுக்கு மிகுந்த பணிச்சுமையை ஏற்படுத்தி வந்தது. இதனால், வேலை நேரத்தில் ஏற்பட்ட மின் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது.


பணியிடங்களை நிரப்ப மீண்டுமொரு முயற்சி


மின்சார வாரியத்தினால் 2022ஆம் ஆண்டில் 10,200 காலியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கோரப்பட்டது. ஆனால் நிதிநெருக்கடியின் காரணமாக இந்த அனுமதி கிடைக்கவில்லை.


தொடர்ச்சியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கை மற்றும் அமைச்சருடன் நடந்த விவாதங்களின் பிறகே, அரசின் அனுமதி பெறும் முயற்சி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.


அறிவிப்பு விரைவில் வெளியீடு


இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர், கம்பியாளர் போன்ற பதவிகளில் 10,200 காலிப்பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்பு


இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மின்சாரத் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு உருவாகும். மேலும், இதன் மூலம் மின்சாரத்துறையில் பணிச்சுமை குறையும் என நம்பப்படுகிறது.

Comments

Popular posts from this blog