டெட் தேர்வை பற்றி அறிவிக்காத தமிழக அரசு!! ஆசிரியர்கள் குமுறல்!!





நம் தமிழக அரசின் உத்தரவின்படி, வருடத்திற்கு இருமுறை டெட் தேர்வு வைக்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு குழு அறிவித்திருந்தது.


ஆனால், வருடம் முடியும் வரை டெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகவே இல்லை. கடைசியாக தமிழகத்தில் 2023 அக்டோபரில் இந்த தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இதனால், இந்த வருட டெக் தேர்வு குறித்து பி.எட் படிப்பை முடித்த ஆசிரியர்கள் வெகு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


போன வருடம் முழுவதும் ஏன் டெட் தேர்வு நடத்தவில்லை என்பது குறித்து தேர்வு ஆணையம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த வருடமாவது, தேர்வு குறித்து முன்கூட்டியே அறிவிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


மேலும், இந்த தேர்வை ஒரு முறையில் கிளியர் செய்வது கடினம். எனவே சென்ற வருடம் பி.எட் படித்த ஆசிரியர்கள் ஒத்திகைக்கு இது பெரும் பயன்படும் என்று ஆசிரிய பெருமக்கள் தெரிவித்து வருகின்றனர். 


இந்த தேர்வை கிளியர் செய்தால் தான் அரசு பள்ளிகளில் அல்லது அரசு சார்ந்த உதவி பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று முனைப்போடு இதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர் பெருமக்கள். தமிழக அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Comments

Popular posts from this blog