நீட் தேர்வு எழுதும் மாணவர்களா? விண்ணப்பிக்கும் முன் இதை பாருங்க.. ரொம்ப முக்கியம்!



நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் APAAR ID கட்டாயமில்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.


APAAR ID கட்டாயமில்லை


இந்த படிப்புகளுக்கு அகில இந்திய ஒடுக்கீட்டின் படி கலநிந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கு தகுதியானர்கள். 


நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் உரிய மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்பம் விரைவில் தொடங்க உள்ளது. 


இதனால் மாணவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளன. இந்த சூழலில், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க APAAR ID கட்டாயம் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு மற்றும் APAAR ID கட்டாயம் என்று கூறப்பட்டிருந்ததது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. 


இந்த சூழலில், நேற்று தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ID கட்டாயமில்லை என்று கூறிய தேசிய தேர்வை முகமை, APAAR ID பெறுவது குறித்து வீடியோவை வெளியிட்டிருக்கிறது.


APAAR ID என்பது என்ன?


APAAR ID என்பது Automated Permanent Academic Account Regiter என்பதாகும். இந்த APAAR ID என்பது பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள மாணவர்கள் வைத்து கொள்வதாகும். இந்த APAAR ID மூலம் மாணவர்கள் தங்களது கல்வி பயணத்தை ஒழுகமைத்துக் கொள்ள முடியும்.


 அதாவது, மாணவர்கள் தங்களது சான்றிதழ்கள், மதிப்பெண்கள் போன்றறை டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். இது மாணவர்களின் இடமாற்றத்திற்கு பெரிதும் உதவும். மேலும், மாணவர்களின் ஒட்டுமொத்த பதிவையும் பாதுகாப்பாக வைக்க உதவும். இதனை மாணவர்கள் விண்ணப்பித்து வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog