ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல்




தமிழகத்தின் 876 கிராமங்கள் மற்றும் 30 மாவட்டங்களில் 3-16 வயதுக்குட்பட்ட 28,984 மாணவர்களிடம் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்து தேசிய அளவிலான ஆய்வு நடத்தப்பட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதில், 8-ம் வகுப்பு மாணவர்களில், 35 சதவீதம் பேர், 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை. 5-ம் வகுப்பு மாணவர்களில் 64 சதவீதம் பேர் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை. மேலும், 3-ம் வகுப்பு மாணவர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.


ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படாமல் இருப்பதும், ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்காததுமே இதற்கு காரணம். 


எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog