குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!





டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2. 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது.


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளை எழுதவுள்ள தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


மேலும் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்;-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 08/2024, நாள் 20.06.2024-ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIஏ பணிகள்) பணிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலை தேர்வு (OMR) 14.09.2024 ம் தேதி நடைபெற்றது என்றும் தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கை 6: 080/2024, நாள் 19.12.2024-601 படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Group II and Group IIA Services) முதன்மைத் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு (OMR) 08.02.2025 முற்பகல், தாள் I தமிழ்மொழி தகுதித் தேர்வு (Descriptive) 08.02.2025 பிற்பகல் மற்றும் தொகுதி II பணிகள் (Group-II Services) பொதுஅறிவு தாள் II (Descriptive) 23.02.2025 அன்று நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.


மேலும் இதற்கான ஹால் டிக்கெட்டை (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே அவர்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog