
அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்.. அந்த மர்மம் என்ன.. ராமதாஸ் எழுப்பிய முக்கியமான கேள்வி தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததன் மர்மம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 3192 ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 2800 ஆக குறைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதால், பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்த...